ராட்சசன் படம் நடிகர் வாழ்க்கையில் சோகம்... இப்படி ஆயிருச்சே

ராட்சசன் படத்தில் சைகோ கில்லரை பிடிக்கும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் விஷ்ணு விஷால் திருமண வாழ்க்கை பந்தம் இன்றுடன் முறிந்தது.

2009ம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுபட்டி, ஜீவா, மாவீரன் கிட்டு என பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் படம் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

இவருக்கு கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ரஜினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சில மாதங்களாக இருவருக்கும் இடையே சில மன வருத்தங்கள் நிலவி வந்த நிலையில், இருவரும் விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடினார்கள்.

நடிகர் விஷ்ணு விஷால் விவாகரத்து

கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்திருந்த நிலையில், இருவருக்கும் இன்று விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதில், “நானும் ரஜினியும் ஒரு வருட காலமாக பிரிந்து இருந்த நிலையில் இப்போது விவாகரத்து நடந்துள்ளது. எங்களுக்கு ஒரு அழகான மகன் இருக்கிறான். எங்கள் மகனுக்கு பிரிந்து வாழ்ந்த நிலையிலும் ஒரு நல்ல பெற்றோராக இருந்து அவனுக்கு தேவையான நல்லது அனைத்தையும் செய்வோம்.

பல வருடங்களை நாங்கள் மகிழ்ச்சியுடன் கடந்துள்ளோம். இனி ஒரு நல்ல மரியாதைக்குரிய நண்பர்களாக இருப்போம்.

இந்த நிகழ்வுக்கு பிறகு, எங்கள் மகன் மற்றும் இரு குடும்பங்களின் நலனையும் கருத்தில் கொண்டு எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளிக்குமாறி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close