scorecardresearch

தர்பார் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரியும் விஷ்ணு விஷால் தம்பி; ரஜினி ரசிகர்கள் வாழ்த்து

Vishnu Vishal’s Brother with Rajinikanth: ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது. அவருக்கு ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Actor Vishnu Vishal's Brother Rudhra, Darbar movie, Darbar directed AR Murugadoss, விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா, தர்பார் படத்தில் உதவி இயக்குனர், Super Star Rajinikanth, Rajinikanth Darbar, Rudhra Assitant Director
Actor Vishnu Vishal's Brother Rudhra, Darbar movie, Darbar directed AR Murugadoss, விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா, தர்பார் படத்தில் உதவி இயக்குனர், Super Star Rajinikanth, Rajinikanth Darbar, Rudhra Assitant Director

Actor Vishnu Vishal’s Brother with Rajinikanth: ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது. அவருக்கு ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தர்ப்பார் படத்தில் நடித்துவருகிறார். அவர் இதற்கு முன்பு இவ்வளவு நீண்ட நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியதில்லை. தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும் தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தர்பார் படத்தில் ரஜினிகாந்த்துடன் நடிகை நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தம்பி ராமையா மற்றும் சுனியல் ஷெட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தர்பார் படத்தில் இயக்குனர் முருகதாஸ் இடம் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா என்பவர் உதவி இயக்குனராக பணிபுரிவது தெரியவந்துள்ளது. தர்பார் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்யும் ருத்ரா படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் மற்றும் ருத்ரா சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துக்கு ரஜினி ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். வருங்காலத்தில் சிறப்பாக வருவதற்கும் தலைவர்களின் படங்களை இயக்குவதற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor vishnu vishals brother rudhra with rajinikanth photo