சீரியல் நட்சத்திரங்கள் சம்யுக்தா விஷ்ணுகாந்த் இடையேயான குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது சம்யுக்தா விஷ்ணுகாந்த் பற்றி கூறியுள்ள தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
விஜய் டிவியின் சிற்பிக்குள் முத்து சீரியலில் இணைந்து நடித்திருந்த விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் சுமார் 7 மாதங்கள் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தங்களது சமூக வலைதளங்களில் இருந்து திருமண புகைப்படங்களை நீக்கியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து விஷ்ணுகாந்த் யூடியூப் சேனல்களின் பேட்டியிலும், சம்யுக்தா தனது சமூகவலைதள லைவ்விலும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். சம்யுக்தா தனக்கு ப்ரபோஸ் செய்துவிட்டு வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார் என்று விஷ்ணுகாந்த் தெரிவித்திருந்தார். அதேபோல் தனது மாதவிடாய் காலத்திலும் தன்னை புரிந்துகொள்ளாமல் விஷ்ணுகாந்த் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அவருக்கு 24 மணி நேரமும் ரொமான்ஸ்’ தேவைப்படுகிறது என்றும் சம்யுக்தா கூறியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது பெற்றோருடன் பேட்டி அளித்த சம்யுக்தா சில அதிர்ச்சித்தகவலை தெரிவித்துள்ளார். இதில் விஷ்ணுகாந்த் எப்போதுமே என்னையும் எனது பெற்றோரையும் மரியாதையுடன் நடத்தியதே இல்லை. அவருக்கு செக்ஸ் மட்டும் தான் முக்கியம். அதை தவிர ஒரு மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்பதே அவருக்கு தெரியவில்லை. 24 மணிநேரமும் அதே ஞாபகமாகத்தான் இருப்பார்.
Advertisment
Advertisement
சம்யுக்தா - விஷ்ணுகாந்த்
அவரது விருப்பத்திற்கு நான் ஒத்துழைக்கவில்லை என்றால் என்னை வேறுவிதமாக நடத்துவார். அவருக்கு சுத்தமாக என்மேல் பாசமே இல்லை. இதுதான் நான் அவரை விட்டு பிரிந்தததற்கான காரணம். ஒரு பொம்மை மாதிரிதான் என்னை பார்த்திருக்கிறார். செக்ஸ் வீடியோவை பார்த்து அதே மாதிரி பண்ணணும்னு சொல்வார். நம்ம பண்றதை நாமே பார்க்கலாம் என்று சொல்லி ரூமில் கேமரா வைக்கலாம்னு சொன்னாரு.
நான் இதுவரை இது குறித்து எங்கும் சொன்னது இல்லை. இதற்கு காரணம் சொன்னால் எனக்கும்தான் அசிங்கம். நான் விஷ்ணுகாந்தை ஏன் பிரிந்து வந்தேன் என்பது மறந்து, என்னுடைய கடந்த கால வாழ்க்கை தான் பெரிய விஷயமா இருக்கு. செக்ஸ் பண்ணும்போது வலிதாங்க முடியாம கத்தினாலும், என்னை வாயை மூடச் சொல்லி அடிப்பார் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய சம்யுக்தாவின் தந்தை, விஷ்ணுகாந்த் செக்ஸ் மாத்திரை போட்டுக்கொண்டு தன் மகளை டார்ச்சர் செய்துள்ளார். ஒரு மனைவியிடம் யாராவது ஆபாச படத்தை காட்டி இந்த மாதிரி பண்ணலாம், அந்த மாதிரி பண்ணலாம்னு சொல்லுவானா. ஒரு விபச்சாரிய கூட அவ உரிமை இல்லாம தொடக்கூடாது அப்படிங்கிறது தான் சட்டம். அவர் இவ்ளோ டார்ச்சர் கொடுத்ததால் தான் ஒரு மாதத்தில் பிரிந்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“