Advertisment

நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மரணம்

உன்னை நினைத்து, பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 62.

author-image
WebDesk
New Update
Tamil cinema Actor Visweswara Rao Passes away Tamil News

நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மரணம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil Cinema: தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக புகழ்பெற்றவர் விஸ்வேஷ்வர ராவ். தனது 6 வயதில் இருந்தே நடிக்க தொடங்கிவிட்ட அவர் இதுவரை 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா தவிர்த்து சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் நடிகை லைலாவுக்கு அப்பாவாக அவர் நடித்திருப்பார். 

இந்நிலையில், 62 வயதான நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலமானார். அவரின் உடல் சென்னை சிறுசேரியில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment