scorecardresearch

’இந்த காலத்துல இப்படி ஒரு நல்லவனா?  மயில்சாமி குறித்து மறைந்த விவேக் பேசிய வீடியோ

கையில் கொஞ்சம் பணம் வந்தாலும், அதை அனைவருக்கும் கொடுப்பார். ஒரு நாளைக்கு பணக்காரராகவும், அடுத்த நாள் வறுமையிலும் வாழ்வார்.- விவேக்

’இந்த காலத்துல இப்படி ஒரு நல்லவனா?  மயில்சாமி குறித்து மறைந்த விவேக் பேசிய வீடியோ

மறைந்த நகைச்சுவை நடிகர்  விவேக் , மயில்சாமி தொடர்பாக  பேசிய வீடியோ தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில் நடிகர் விவேக் பேசியதாவது: ” என்னோடு வயதில் பெரியவந்தான் என்றாலும் நான் அவன் என்றுதான் அழைப்பேன். இவரது குணத்தை பற்றி  இயக்குநர் பாரதிராஜாவிடம் சொன்னால், மயில்சாமியை பற்றி படம் எடுக்க வேண்டும் என்று அவர் நினைத்திருப்பார். அப்படி ஒரு நல்ல  குணம் மயில்சாமிக்கு இருக்கிறது. இந்த காலத்திலும் இவரை போன்ற  நல்லவர் இருப்பாரா ? என்று எனக்கு தெரியவில்லை. இவரை நல்லவர் என்பதா இல்லை ஏமாளி என்பதா? என்று கேட்டால் நல்லவன் மற்றும் ஏமாளி என்றுதான் கூற வேண்டும். கையில் கொஞ்சம் பணம் வந்தாலும், அதை அனைவருக்கும் கொடுப்பார். ஒரு நாளைக்கு பணக்காரராகவும், அடுத்த நாள் வறுமையிலும் வாழ்வார்.

 நடிகர் விவேக் ஓபுராய், தமிழ் மக்களுக்கு உதவியபோது, கழுத்தில் இருந்த எம்.ஜி.ஆர் டாலருடன் இருந்த தங்க ஜெயினை அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பி வந்துவிட்டார். எம்.ஜி.ஆர் மீது உள்ள அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர். கிட்டதட்ட, பாரதி மாதிரிதான் அவரும். மயில்சாமியின் மனைவி வீட்டில் பணமில்லை என்று சொல்லும்போது, கஷ்டப்பட்டு வேலை தேடி அதை செய்வார். ஆனால் அந்த பணத்தை வாங்கியதும், முதலில் மற்றவர்களுக்கு உதவிய பிறகே வீட்டுக்கு கொடுப்பார். உதவி. உதவி.உதவி என்று எப்போதுமே மற்றவர்களுக்கு உதவி செய்வார். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் நள்ளிரவில் 12 மணிக்கு அழைத்து தயக்கமே இல்லாமல் உதவு கேட்பார். அவர் செய்த நல்ல விஷயங்களை அவர் காப்பாற்றும்” என்று அவர் கூறியுள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor vivek about mayilsamy character