Advertisment

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படம்... யார் நடிக்கிறார் தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Narendra Modi, நரேந்திர மோடி

Narendra Modi, நரேந்திர மோடி

Narendra Modi biopic : பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படம் உருவாக உள்ளது. இப்படத்தில் மோடியாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தான் நடிக்க இருக்கிறார் எனத் தகவல்.

Advertisment

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. பயோபிக் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைப்பதாலும், உண்மை சம்பவத்தை கொண்டு திரைப்படம் எடுப்பது சவாலாக இருப்பதாலும் ஃபிலிம் மேக்கர்கள் பலரும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Narendra Modi biopic : நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படம்

இந்நிலையில், பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பயோ-பிக் திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. ‘பி.எம். நரேந்திர மோடி’ என்ற பெயரில் வெளிவர உள்ள இந்தப் படத்தில் மோடி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் விவேக் ஓபராய் நடிக்க உள்ளதாகவும் , வரும் 7ஆம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவர உள்ளதாகவும் பிரபல திரைப்படத் துறை வல்லுநர் தருண் ஆதர்ஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

January 2019

மேலும் இந்த மாதத்திலேயே படப்படிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘மேரிகோம்’ , ‘சரப்ஜித்’ போன்ற பயோபிக் படங்களை இயக்கிய ஓமங் குமார் இந்த படத்தை இயக்க உள்ளார். குஜராத், டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தர்கண்ட் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Narendra Modi Bollywood Vivek Annand Oberoi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment