ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி ஆகும் விஜே சாம்... வெளியான புதிய அறிவிப்பு

கடந்த சில வருடங்களாக சின்னத்திரையில் நடிகராக வலம் வரும் இவர், தனக்கான அங்கிகாரம் கிடைக்காமல் இருந்து வந்தார்.

கடந்த சில வருடங்களாக சின்னத்திரையில் நடிகராக வலம் வரும் இவர், தனக்கான அங்கிகாரம் கிடைக்காமல் இருந்து வந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி ஆகும் விஜே சாம்... வெளியான புதிய அறிவிப்பு

தொலைக்காட்சி சேனல்களில் வி.ஜே.பணியாற்றிய பலர் தற்போது சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். அந்த வகையில், சன் மியூசிக் சேனலில் வி.ஜே.வாக பணியாற்றி தற்போது சீரியலில் நடிகராக உயர்ந்துள்ளவர் சாம்.

Advertisment

தற்போது சன் டி.வி.யின் அருவி சீரியலில் நாயகனுக்கு அண்ணனாக நடித்து வரும் இவர், ஏற்கனவே சன்டிவியின் ஒரு சில சீரியல்களில் நடித்துளளார். கடந்த சில வருடங்களாக சின்னத்திரையில் நடிகராக வலம் வரும் இவர், தனக்கான அங்கிகாரம் கிடைக்காமல் இருந்து வந்தார்.

ஆனாலும் சமீப காலமாக சீரியல்களில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் கமிட் ஆகி வரும் சாம் தற்போது ஒரு ஹிட் சீரியலில் முக்கிய கேரக்டருக்கு ரீ-ப்ளேஸ்மெண்ட் ஆகியுள்ளார்.

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமீழின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக வலம் வரும் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில், சாம் என்ட்ரி ஆகியுள்ளார்.

Advertisment
Advertisements

அந்த சீரியலில் அகிலன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் சாணக்யா தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது அகிலன் கேரக்டரில் நடிக்க நடிகர் சாம் கமிட் ஆகியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்த பதிவை பார்த்த நடிகர் சாணக்யா வெல்கம் நியூ அகிலன் ஆல் தி பெஸ்ட் சாம் ப்ரோ என்று தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: