க. சண்முகவடிவேல்
சென்னை 28, மீசைய முறுக்கு, நட்பே துணை, மெகந்தி சர்க்கஸ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, தேவ் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகரான நடித்து பிரபலமானவர் விஜே விக்னேஷ் காந்த். நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், சில பாடல்களையும் எழுதி உள்ளார்.

இந்நிலையில், விக்னேஷ் காந்தக்கும், இன்ஜினியரிங் பட்டதாரியான ராஜாத்தி என்பவருக்கும், சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்தது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ் காந்த் ராஜாத்தி திருமணம் நேற்று திருச்சி வயலூர் முருகன் கோவிலில் நடைபெற்றது.
ராஜாத்தி விக்னேஷ்காந்தின் உறவுப் பெண் என்பதால் இரு வீட்டார் தவிர வேறு யாரையும் திருமணத்திற்கு அழைக்கப்படாத நிலையில், விக்னேஷ்காந்தின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் மட்டும் திருச்சி வந்து திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த விக்னேஷ் திட்டமிட்டிருக்கிறார். திருமண புகைப்படத்தை வலைதளங்களில் விக்னேஷ் காந்த் வெளியிட்டுள்ளார். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“