யோகி பாபுவின் திருமணம் இணையத்தில் வைரலான புகைப்படம்

நடிகர் யோகி பாபுவுக்கு திருமணமாகிவிட்டது என்றும் அவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டது. இதனால், யோகி பாபுவின் திருமணம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

Yogibabu Sabitha Rai marriage controversy
Yogibabu Sabitha Rai marriage controversy

நடிகர் யோகி பாபுவுக்கு திருமணமாகிவிட்டது என்றும் அவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டது. இதனால், யோகி பாபுவின் திருமணம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மெல்ல நகைச்சுவை நடிகராக மாறினார். அதுமட்டுமில்லாமல், தர்மபிரபு போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.

நடிகை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, ஜெயம் ரவியின் கோமாளி, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

நடிகர் யோகிபாபு, நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்களிலும் நடித்துவருகிறார். யோகி பாபு தனது நகைச்சுவை நடிப்பு மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார்.

இந்த நிலையில்தான், நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் அவருடன் ஒரு பெண் இருக்கும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு அவர்தான் யோகி பாபுவின் மனைவி என்றும் கூறி இணையத்தில் அந்தப் படம் பலராலும் பகிரப்பட்டு வைரலானது. சிலர் யோகி பாபுவின் மனைவி மிகவும் அழகாக உள்ளதாகக் கூறி கம்மெண்ட் செய்தனர்.

இப்படி தனது திருமணம் பற்றி இணையத்தில் பரபரப்பாக பகிரப்படும் புகைப்படம் பற்றி யோகி பாபுவின் கவனத்துக்கு சென்றதைத் தொடர்ந்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து யோகி பாபு டுவிட்டரில் குறிப்பிடுகையில், “என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி.” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், நடிகர் யோகி பாபுவின் திருமணம் பற்றி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு பரப்பிவந்த வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor yogi babu marriage photo viral but he refused

Next Story
சினிமா விழாவில் இந்தியில் பேசச் சொன்ன ரசிகர்: தமிழ், தெலுங்கில் பேசட்டுமா எனக் கேட்ட டாப்ஸிActress Taapsee Pannu refuses to speak in hindi, audience asks at Topsee pannu, Taapsee Pannu refuses to speak in hindi, டாப்ஸி பன்னு, இந்தியில் பேச மறுத்த டாப்ஸி பன்னு, Goa 50th Internation film festival of India, Topsee Pannu, bollywood, kollywood, tollywood, south indian actress taapsee pannu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com