scorecardresearch
Live

தோனி கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு; யோகி பாபு நன்றி தெரிவித்து வீடியோ

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசு அளித்துள்ளார். அதற்கு யோகி பாபு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Yogi Babu, MS Dhoni, Dhoni bat gift to Yogi Babu, viral video, tamil cinema

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசு அளித்துள்ளார். அதற்கு யோகி பாபு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை என 2 உலகக் கோப்பைகளையும் வென்ற இந்திய அணியின் கேப்டனாக விளங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவானாக இருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருகிறார். கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து அவருடைய மார்க்கெட்டை உயர்த்தியது. யோகி பாபு ஒரே நேரத்தில் காமெடியனாகவும் ஹீரோவாகவும் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

யோகி பாபு கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வமுள்ளவர். அதனால், ஷூட்டிங் ஸ்பாட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் நடிகர் விஜய் பரிசளித்த பேட் கொண்டு யோகி பாபு கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று லைக்குகளை குவித்தது.

இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனி தான் வளைப் பயிற்சியில் விளையாடிய கிரிக்கெட் பேட் ஒன்றை நடிகர் யோகி பாபுவுக்கு பரிசளித்திருக்கிறார். இதற்கு யோகி பாபு கிரிக்கெட் வீரர் தோனிக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தோனிக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பேட்டை தோனி பயிற்சியின் போது பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே போல, தோனி கையெழுத்திட்ட பேட் ஒன்றை தனது கையில் வைத்தபடி இருக்கும் புகைப்படத்தையும் யோகி பாபு பகிர்ந்துள்ளார். அந்த பேட்டில், ‘Best Wishes Yogi Babu’ என குறிப்பிடப்பட்டு தோனியின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.

நடிகர் யோகி பாபுவுக்கு கிரிக்கெட் வீரர் தோனி பேட் பரிசளித்ததற்கு யோகி பாபு நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates

Web Title: Actor yogi babu thanks to ms dhoni for his gift video