யோகி பாபுவை மறக்காத நயன்தாரா... கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்!

என்னிடம் கேட்கவே வேண்டாம்.. யோகிதானா தாராளமாக நடிக்க வையுங்கள்

என்னிடம் கேட்கவே வேண்டாம்.. யோகிதானா தாராளமாக நடிக்க வையுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
யோகி பாபு நயன்

யோகி பாபு நயன்

கோலமாவு கோகிலா படத்தை யோகி பாபுக்காகவே  பலமுறை தியேட்டருக்கு சென்று ரசித்தவர்கள் ஏராளம்.  ஒரே ஒரு பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்ட நம்ம யோகி பாபுவுக்கு அடித்தது யோகம். அடுத்தும் நயன்தாராவின் படத்தில் ஒப்பந்தமானர்.

Advertisment

கல்யாண வயசுத்தான் வந்துடூச்சி டி.. வெயிட் பண்ணவா?  இந்த பாடலை கேட்டவுடன்   எல்லோரும் மனதிலும் நயன் ஞாபகத்திற்கு வருகிறாரோ இல்லை யோகி பாபு வந்து விடுகிறார்.   டூயட் இல்லை, கிஸ்ஸிங் சீன் இல்லை ஆனாலும்  கோலமாவு கோகிலா படத்தில்  நயன் தாராவின் ஜோடி யார் என்றால் யோகி பாபு தான் என்பார்கள்.

யோகி பாபு நயன் கூட்டணி:

இந்த படத்தில் யோகி பாபு- நயன்தாரா இடையிலான சீன்களை  நயன் எப்படி நடித்தார்..? யோகியின் காமெடி பன்ச்களை கைத்தட்டி ரசித்தவற்றையெல்லாம் உருக்கமாக யோகிபாபு படம் வெளியான பின்பு அளித்திருந்த பேட்டிகளில் கூறி இருந்தார்.

Advertisment
Advertisements

யோகி பாபு நயன்

இந்நிலையில்  நயன் இரட்டை வேடத்தில் அசத்த வரும் ஐரா படத்திலும் யோகி பாபு நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.  இந்த செய்தி வெளியான  நேரத்திலிருந்து ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அடுத்த வெற்றி கூட்டணிக்கு ரெடி, வெய்டிங் என்று மீம்ஸ்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான  ஐரா படத்தின் போஸ்டரும் இணையத்தில்  ட்ரெண்டிங்கில் இடம் பிடித்ததிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜரா படம் வரும் டிசம்பர் மாத  திரைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் இந்த படத்தில்,  யோகி பாபு நடிப்பது குறித்து நயன் தாராவிடம்  இயக்குனர் சார்ஜா கூறியதும், நயன்  “என்னிடம் கேட்கவே வேண்டாம்.. யோகிதானா தாராளமாக நடிக்க வையுங்கள் ” என்றாராம்.

Tamil Cinema Nayanthara Madras Rockers

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: