/indian-express-tamil/media/media_files/2025/09/12/vijay-2025-09-12-14-44-51.jpg)
இந்தப் படத்தில் விஜய்யை கலாய்த்து டயலாக்... யோகி பாபுவுக்கு விட்டுக் கொடுத்த தளபதி!
தமிழ் திரைப்பட துறையில் தனது காமெடி மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் யோகிபாபு. இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து பிரபல நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார். தனது நேர்த்தியான நடிப்பு மற்றும் நகைச்சுவையால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார் யோகிபாபு.
யோகிபாபு காமெடியனாக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் ரவிமோகன் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பாவனா தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் யோகி பாபுவிற்கு - பாவனாவிற்கும் வார்த்தை போர் நடைபெற்றது. தொகுப்பாளினி பாவனா யோகிபாபுவை மட்டம் தட்டுவது போல் பேசுவதாக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து பதிவிட்டு வந்தனர். மேலும், பிரபலங்கள் பலரும் பாவனாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டு வந்தனர். தற்போது இந்த பிரச்சனை காற்றில் கரைந்து விட்டது.
நடிகர் யோகிபாபு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ’மெர்சல்’ படத்தின் போது நடிகரும் தற்போதைய தவெக தலைவருமான விஜய் தன்னை மோட்டிவேட் செய்தது குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, “மெர்சல் படம் பண்ணும்போது சமந்தா வந்து கேட்பாங்க தம்பி இங்க யாருடா ஐந்து ரூபா டாக்டர் என்று அதற்கு விஜய் பாக்குறதுக்கு யாரு பர்சனாலிட்டியா இருங்கானோ அவன்தான் ஐந்து ரூபா டாக்டர் என்று பதிலளிப்பார். அதற்கு நான் அப்ப நீ இல்ல போப்பா என்று சொல்வேன். நான் முதல் டேக்கில் சொல்லிவிட்டு இரண்டாவது டேக்கில் சொல்லவில்லை. அப்போது நீ ஏன் உன்ன இறக்கிக்கிற தைரியமா சொல்லுடா என்று சொன்னார். பெரிய லெவலில் இருக்கும் யாரும் தன்னை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். ஆனால் விஜய், நன் அந்த டயலாக் சொன்னதற்கு எதுவும் சொல்லவில்லை “ என்றார். இந்த கருத்து பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.