சமீபத்தில் வைரல் ஹிட்டான ‘ஜிமிக்கி கம்மல்’ பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் ஓவியா. அத்துடன், ஆரவ் - ஓவியா இருவரும் எதிரெதிரே அமர்ந்து கேள்வி கேட்டுக் கொள்ளும் பகுதியும், தீபாவளியன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
‘பிக் பாஸ்’ மூலம் திடீரென உச்சத்துக்கு சென்றவர் ஓவியா. மற்றவர்களுக்காக நடிக்காமல், தன் மனதுக்குப் பிடித்தபடி ஓவியா நடந்து கொண்டதால், எல்லோரின் மனதிலும் இடம்பிடித்தார் ஓவியா. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு வாரமும் ஓவியா எவிக்ஷனுக்கு நாமினேட் ஆனாலும், ‘ஓவியா ஆர்மி’யினர் அவருக்காக ஓட்டுபோட்டு காப்பாற்றி வந்தனர்.
‘பிக் பாஸ்’ முடிந்த பிறகும் ஓவியாவின் மவுசு குறையவில்லை. சென்னை, ஓ.எம்.ஆரில் அமைந்துள்ள சரவணா ஸ்டார்ஸ் கடையைத் திறக்க ஓவியா வந்தபோது, அவரைப் பார்க்க ஏகப்பட்ட மக்கள் கூட்டம். ஓவியா பெயரில் பெண்களுக்கான ஆடைகளும் இந்த தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, ஏராளமான சினிமா வாய்ப்புகளும் ஓவியாவைத் தேடி வருகின்றன. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன் ஓவிய கமிட்டான ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில், ஆரம்பத்தில் அவருக்கு குறைவான காட்சிகளே இருந்தன. ஆனால், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, அவருடைய காட்சிகள் அதிகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ‘காட்டேரி’, ‘காஞ்சனா 3’ படங்களிலும் கமிட்டாகியுள்ளார் ஓவியா.
இந்நிலையில், ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களை வைத்து தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை ஷூட் செய்துள்ளது விஜய் டிவி. விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில், ஆரவ், ஓவியா, சினேகன், காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஆர்த்தி, அனுயா, காஜல், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, ரைஸா, பரணி, ஷக்தி, சுஜா வருணி, வையாபுரி, ஜூலி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் வைரல் ஹிட்டான ‘ஜிமிக்கி கம்மல்’ பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் ஓவியா. அத்துடன், ஆரவ் - ஓவியா இருவரும் எதிரெதிரே அமர்ந்து கேள்வி கேட்டுக் கொள்ளும் பகுதியும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.