செக் மோசடி: ராதிகாவுக்கு பிடிவாரண்ட், சரத்குமார் தண்டனை நிறுத்திவைப்பு

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு ஓராண்டு ஆண்டு சிறை

radhika sarathkumar jaya tv, actor meena about sarathkumar, jaya tv autograph, நடிகை ராதிகா, ராதிகா சரத்குமார், ஜெயா டிவி

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு ஓராண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மேல்முறையீடு செய்தவற்காக சரத்குமாரின் தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டிபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரேடியன்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்திடம் கடந்த 2014 ம் ஆண்டு 2 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தனர்.ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் பணத்தை திருப்பி தருமாறு கோரிய நிலையில், மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் 75 லட்ச ரூபாய்க்கான 2 காசோலையும், சரத்குமார் சார்பில் தனிப்பட்ட முறையில் 10 லட்சம் மதிப்புள்ள 5 காசோலையும் வழங்கப்பட்டது. ஏழு காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விடவே ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில 7 செக் மோசடி வழக்குகள் தொடரப்பட்டது. இரு வழக்கில் சரத்குமார், ராதிகா சரத்குமார்,தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும், மற்ற 5 வழக்கில் சரத்குமாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த இந்த வழக்குகள், முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள்,எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

தொடர்ந்து,இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அலிசியா,சரத்குமார் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.மொத்தமுள்ள 7 வழக்குகளில் சரத்குமார் மட்டும் தொடர்புடைய ஐந்து வழக்குகளில் தலா ஓராண்டும், சரத்குமார், ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும் தொடர்புடைய இரு வழக்குகளில் மூவருக்கும் தலா ஓராண்டும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து. அதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.செக் மோசடியில் ஈடுபட்டதற்காக மூவரும் தொடர்புடைய இரண்டு வழக்குகளில் 2.8 கோடி அபராதமும், சரத்குமார் தொடர்புடைய 5 வழக்குகளில் 50 லட்சம் அபராதம் என மொத்தம் 3 கோடியே 30 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையே உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதனை விசாரித்த நீதிபதி 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். ராதிகா சரத்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. கொரோனா பாதித்ததால், விசாரணைக்கு ஆஜராகவில்லை என ராதிகா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actors sarathkumar and radhika convicted in cheque bounce case

Next Story
பாத்ரூமை வச்சு 300 எபிசோட் ஒட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ்… பாக்கியலட்சுமி குரூப் லேசுபட்டவங்களா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com