scorecardresearch

கட்டுமஸ்தான உடம்பு; மதுரை மண்ணில் உடற்பயிற்சி… விஜயகாந்தை இப்படி பார்த்து இருக்கிறீர்களா?

பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரான உயர்ந்த விஜயகாந்த் தயாரிப்பாளராகவும், விருதகிரி என்ற படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் முத்திரை பதித்தவர்.

கட்டுமஸ்தான உடம்பு; மதுரை மண்ணில் உடற்பயிற்சி… விஜயகாந்தை இப்படி பார்த்து இருக்கிறீர்களா?

நடிகர் அரசியல்வாதி என பயணித்து வந்த விஜயகாந்த் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஓய்வில் இருந்து வரும் நிலையில், அவர் தொடர்பான தகவல்கள் நாள்தோறும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், அரசியலில் குறுகிய காலத்தில் முத்திரை பதித்தவர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, ஈட்டி, நூறாவது நாள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தொடக்கத்தில் பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரான உயர்ந்த விஜயகாந்த் தயாரிப்பாளராகவும், விருதகிரி என்ற படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் முத்திரை பதித்தவர். மேலும் ஜெயலலிதா கருணாநிதி என இரண்டு அரசியல் ஆளுமைகள் இருந்த காலகட்டத்தில் தனியாக அரசியல் கட்சி தொடங்கி குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த்.

தான் நடிகராக இருந்த காலகட்டத்திலும், அரசியலில் இருந்து காலட்டத்திலும் ஏராளமாக உதவிகளை செய்துள்ள விஜய்காந்த், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கு சமமான உணவு வழக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் மேலும் நண்பர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், உதவி என்று யார் கேட்டாலும் அனைவருக்கு உதவுபவர் என்று அவருடன் இருந்த பலரும் கூறியுள்ளனர்.

தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியலில் இருந்து விலகியுள்ள விஜயகாந்த் ஓய்வில் இருந்து வருகிறார். ஆனாலும் தினமும் அவர் பற்றிய தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.  டூரிங் டாக்கிஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவில் விஜயகாந்த் உடற்பயிற்சி செய்கிறார்.

தொடர்ந்து தனது நண்பர்களுடன் அரட்டை, சீட்டு விளையாடுவது, தனது தயாரிப்பு நிறுவன ஊழியர்களுடன் உரையாடல், தனது ரைஸ் மில்லில் ஊழியர்களுடன் வேலை செய்வது, அவர்களுடன் அரட்டை அடிப்பது, நெல் ஊரல் மற்றும் அவிப்பது என்பது என்பது குறித்து பேசியுள்ளார். இதை பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actory and politician vijayakanth old video viral on social media