Actress Aishwarya Rai Family Meet Sarathkumar : பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக குடும்பத்துடன் புதுச்சேரி வந்துள்ள பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்புக்கு இடையே நடிகர் சரத்குமாரை சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுப்படத்தை இயக்கி வருகிறார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், விக்ரம் ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்தீபன், விக்ரம்பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக குடும்பத்துடன் புதுச்சேரி வந்துள்ள ஐஸ்வர்யா ராய அவரது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா ஆகியோரை சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், அவர்களின் பணிவு மற்றும் அரவணைப்பு மிகவும் ஆச்சரியமாக இருந்தது, நான் அவர்களின் அன்பால் அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளேன். எங்களை சந்தித்து எங்களுடன் நேரத்தை செலவிடுவது உங்களுக்கு மிகவும் இனிமையாக இருந்தது என்று நினைக்கிறேன் கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் வழங்குவார் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில், ஐஸ்வர்யா மந்தாகினி தேவி மற்றும் நந்தினி என்ற இரு கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், நடிகர் சரத்குமார் பெரிய பழவேட்டரையார் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil