அதே வாய்ஸ்… அதே மாடுலேஷன்… கோவை சரளாவை ஜெராக்ஸ் எடுத்த சீரியல் நடிகை!

நடிகை ரித்திகா கோவை சரளாவின் கொஞ்சும் கொங்கு வழக்கில் அதே குரலில் அதே மாடுலேஷனில் அருமையாக மிமிக்ரி செய்து கோவை சரளாவை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி பெர்ஃபார்மன்ஸ் செய்துள்ளார்.

Actres Rithika, Rithika mimicry like Kovai Sarala, vijay tv, Comedy Raja Kalakkal Rani, Comedy Raja Kalakkal Rani promo video, rithika, bala, rithika performs lik kovai sarala, விஜய் டிவி, காமெடி ராஜா கலக்கல் ராணி, புரோமோ, கோவை சரளா மாதிரி மிமிக்ரி செய்த ரித்திகா, ரித்திகா, பாலா, vijay t, rithika mimicry, bala comedy, serial actress rithika

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் அளவுக்கு நடிகைகள் வரவில்லை. நகைச்சுவை நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவு எண்ணிக்கையில்தான் உள்ளனர். ஆனால், வெற்றி பெற்ற நகைச்சுவை நடிகைகள் எல்லோருமே பெரிய நட்சத்திரங்கள் என்றால் அது மிகையல்ல. தமிழ் சினிமா உலகில் வண்ணப் படங்கள் காலத்தில் நகைச்சுவை நடிகையாகவும் குணச்சித்திர நடிகையாகவும் கோலோச்சியவர் ஆச்சி மனோரமா. அவருக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நகைச்சுவை நடிகை என்றால் அது கோவை சரளாதான்.

கோவை சரளாவின் கொஞ்சும் கொங்கு வட்டார வழக்கில் கொஞ்சம் ஹம்மிங் இழுவையுடன் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதும் எப்போதும் சினிமாவில் ரசிகர்களால் கொஞ்சும் கொங்கு தமிழ் பேசும் கோவை சரளா விரும்பப்படுபவராக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில்தான், விஜய் டியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி புதிய நிகழ்ச்சியில் நடிகை ரித்திகா அசல் கோவை சரளா போல அதே மாடுலேஷனில் நடித்து அசத்தியுள்ளார். அவருடன் கேபிஒய் நகைச்சுவைக் கலைஞர் பாலா செமையாக விஜய் டிவியை கலாய்த்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் புரோமோவை விஜய் டிவி சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையடுத்து வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் நகைச்சுவை கலைஞர்கள் மற்றும் சீரியல் நடிகைகள் ஜோடியாக இணைந்து காமெடி செய்யும் நிகழ்ச்சிதான் இந்த காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதாவாக நடிக்கும் நடிகை ரித்திகாவும் கேபிஒய் காமெடியன் பாலாவும் இணைந்து செம காமெடி பெர்ஃபார்மன்ஸை கொடுத்திருக்கிறார்கள்.

விஜய் டிவி வெளியிட்டுள்ள காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சி புரோமோ வீடியோவில், பாலா “இதற்கு பெயர் தான் விஜய் டிவி தோசை கரண்டி” என்று கூறுகிறார். அதற்கு கோவை சரளா குரலில் ரித்திகா ஏன் அந்த பெயர் என கேட்கிறார். அதற்கு பாலா அதிரடியாக, “எல்லாமே திருப்பி திருப்பி போடலாம்” எனக் கூறி அவர் நடிக்கும் டிவியையே கலாய்த்து இருக்கிறார்.

பாலா ஒரு பக்கம் விஜய் டிவியை கலாய்க்கிறார் என்றால் அவருடன் நடித்த ரித்திகா கோவை சரளாவின் கொஞ்சும் கொங்கு வட்டார வழக்கில் அதே குரலில் அதே மாடுலேஷனில் அருமையாக மிமிக்ரி செய்து கோவை சரளாவை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி பெர்ஃபார்மன்ஸ் செய்துள்ளார். ரித்திகா கோவை சரளா குரலில் பேசியதை நடுவராக இருந்த மதுரை முத்துவும் அங்கீகரிக்கிறார். நிச்சமாக வருகிற ஞாயிறுகிழை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சி நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம். இந்த் புரோமோ வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actres rithika mimicry like kovai sarala comedy raja kalakkal rani promo video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com