/indian-express-tamil/media/media_files/TG2gzGT04KcS5C6BIYCN.jpg)
கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடிக்கும்போது நடிகை அபிராமிக்கு 19 வயதுதான் ஆகியுள்ளது.
Actress Abhirami on Virumandi Movie: உலக நாயகன் கமல்ஹாசனுடன் விருமாண்டி என்ற படத்தில் கதாநாயகி ஆக இணைந்து நடித்தவர் அபிராமி. இந்தப் படத்துக்கு பின்னர் அபிராமி படங்களில் நடிக்கவில்லை.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தில் டப்பிங் பணிகளில் பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியுள்ளன.
தற்போது ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். இவர், அமெரிக்காவில் இருந்து மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். தற்போது சொந்த மாநிலமான கேரளத்தில் ஓய்வெடுத்துவருகிறார்.
இதற்கிடையில், தமிழக ஆன்லைன் ஊடகம் ஒன்றுக்கு அபிராமி அளித்த பேட்டியில், “தமக்கு 19 வயது இருக்கும்போது கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் இணைந்து நடித்தேன் எனக் கூறியுள்ளார்.
படத்தில் தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பு குறித்து பேசுகையில், “வயதுக்கும் நடிப்புககும் தொடர்பு இல்லை. இயக்குனர் சொல்லக் கேட்டு உள்வாங்கி அப்படியே நடித்தேன்” என்றார்.
அமெரிக்கா சென்றது குறித்து பகிர்ந்துக் கொண்ட அபிராமி, “விருமாண்டி படத்துக்கு பின்னர் உயர் படிப்புக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தேன். அப்படியே செய்தேன். அதனால்தான் படங்களில் நடிக்க முடியவில்லை” என்றார்.
மேலும், அடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்றும் அபிராமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.