திருமணம் ஆகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு தத்துக் குழந்தை: நடிகை அபிராமி க்யூட் போட்டோ

அர்ஜூன் நடிப்பில் வெளியான வாணவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அபிராமி பல படங்களில் நடித்திருந்தார்.

அர்ஜூன் நடிப்பில் வெளியான வாணவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அபிராமி பல படங்களில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Abirami

நடிகை அபிராமி

கமல்ஹாசனின் விருமாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த அபிராமி அன்னையர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக செய்தியை பகிர்ந்துள்ளார்.

Advertisment

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை அபிராமி கடந்த 1995-ம் ஆண்டு மலைாயளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். அதன்பிறகு 1999-ம் ஆண்டு சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான பத்ரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தான் கல்லூரியில் படிக்கும்போதே சின்னத்திரையில் தொகுப்பாளியாக இருந்த அபிராமிக்கு பத்ரம் படம் பெரிய வெற்றியை கொடுத்தது.

தொடர்ந்து அர்ஜூன் நடிப்பில் வெளியான வாணவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அபிராமி, அதன்பிறகு தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான விருமாண்டி படம் அபிராமிக்கு பெரிய திருப்புமணையாக அமைந்தது.

விருமாண்டி படத்திற்கு பின் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட அபிராமி அங்கு வேலையும் செய்து வந்துள்ளார். தொடர்ந்து 2014-ம் ஆண்டு ராகுல் என்பரை திருமணம் செய்துகொண்ட அபிராமி அதே ஆண்டு மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அடுத்து ஜோதிகாவின் ரீ-என்டரி படமான 36 வயதினிலே படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து தமிழிலும் ரீ-என்டரி ஆன அபிராமி விஸ்வரூபம் படத்தில் நடிகை பூஜா குமாருக்கு டப்பிங் பேசியிருந்தார்.

Advertisment
Advertisements

தற்போது தமிழ் தெலுங்கு மாலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் அபிராமி திருமணமாகி 14 வருடங்களுக்கு பிறகு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். தானும் தனது கணவரு ராகுலும் கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்ததாகவும், அந்த குழந்தைக்கு கல்கி என்று பெயரிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அபிராமி, இது தனது வாழ்க்கையை மாற்றிய தருணம் என்று கூறியுள்ளார்.

மேலும், புது அம்மாவாக அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள அபிராமிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: