Advertisment

மி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்

நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார்

author-image
WebDesk
Oct 20, 2018 19:51 IST
New Update
அர்ஜுன் மீது பாலியல் புகார்

அர்ஜுன் மீது பாலியல் புகார்

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மி டூ என்ற பிரச்சாரம் ஒன்று இந்தியா முழுவதும் சூடு பிடித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுயை மி டூ (அதாவது நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்) என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

தமிழகத்தை பொறுத்தவரை வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூற, விவகாரம் பெரிதானது. தொடர்ந்து மற்ற பெண்கள் கூறும் பாலியல் குற்றச்சாட்டுகளையும் சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

தொடர்ந்து நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக், இயக்குநர் சுசி கணேசன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜூன் மீது புகார் பாய்ந்துள்ளது. கன்னடத்தில் பிரபல நடிகையான ஸ்ருதி ஹரிஹரன், 'ஆக்ஷன் கிங்' என ரசிகர்கள் அழைக்கும் அர்ஜூன் மீது பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். நடிகர் அர்ஜூன் உடன் 'விஸ்மயா' என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இந்த புகாருக்கு அர்ஜூன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், நடிகை மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

#Arjun Sarja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment