நடிகை அதிதி ஷங்கர் தான் சினிமாவில் வெற்றி பெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தனது தந்தை இயக்குநர் ஷங்கர் போட்ட கண்டிஷன் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதிதி ஷங்கருக்கு முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த படத்தைத் தொடர்ந்து, அதிதி ஷங்கர் நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். மாவீரன் படம் பெரும் பெற்று பெற்றது.
இதையடுத்து, அதிதி ஷங்கர் நடித்து வெளியாகியுள்ல ‘நேசிப்பாயா’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. நடிகை அதிதி ஷங்கர் எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. இவர் யாரும் எதிர்பாராத வகையில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் அளித்துள்ள பேட்டியில் தனது தந்தை தனக்கு விதித்த நிபந்தனை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதில் “மருத்துவ படிப்பு முடிந்ததும்தான் நடிக்க முயற்சிப்பேன் என அப்பாவிடம் கூறியிருந்தேன். அவர் நீண்ட நேரம் யோசித்துவிட்டு கடைசியில் ஒரு நிபந்தனையுடன் எனக்கு அனுமதி வழங்கினார். அது என்ன நிபந்தனை என்றால், நான் வெற்றிபெறவில்லை என்றால் மருத்துவத்திற்கு திரும்ப வேண்டும் என்பதுதான்” என அதிதி ஷங்கர் கூறியுள்ளார்.