/tamil-ie/media/media_files/uploads/2018/10/aishwarya-dutta-apologize.jpg)
Aishwarya Dutta apologize
Aishwarya Dutta: பிரபல பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகிய ஐஸ்வர்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டி வீடியோ பதிவிட்டுள்ளார்.
2018ம் ஆண்டின் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் இறுதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்த 16 பிரபலங்கள் பங்கேற்றனர். இவர்களில் மிகவும் சர்ச்சைக் குரிய போட்டியாளர் தான் ஐஸ்வர்யா தத்தா.
நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு வாரத்திற்கு செல்ல பிள்ளைப் போல் இருந்த ஐஸ்வர்யாவின் உண்மை ரூபம் சில நாட்களிலேயே வெளியே வரத் தொடங்கியது. அதிலும் நாட்கள் கடந்து செல்ல, டாஸ்க்குகள் கடினமாக தரப்பட்டது. டாஸ்க் வரும் வரை சாந்தமாக இருக்கும் ஐஸ், போட்டி தொடங்கிய அடுத்த நொடியே சைத்தானாக மாறிவிடுவார்.
Aishwarya Dutta apologizes : மன்னிப்பு கேட்டார் ஐஸ்வர்யா தத்தா :
இவ்வாறு, ஷாரிக் பையா சர்ச்சையில் தொடங்கி, பாலாஜி மீது குப்பை கொட்டியது, ஜனனியை உடல் ரீதியாக தாக்கியது, பிக் பாஸ் வீட்டு பொருட்களை சேதப்படுத்தியது என அனைத்தையும் வன்முறையாக கையாண்டார்.
இந்த போட்டியின் இறுதி சுற்றில், ரித்விகா வெற்றிப்பெற ஐஸ்வர்யா 2ம் இடத்தை பிடித்தார். நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
Love you all from the bottom of my heart ???????????????? Thanks for showering your love and support towards me???? pic.twitter.com/kTaWHHsk8s
— Aishwarya Dutta (@AishwaryaaDutta) 3 October 2018
அதில், இவர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் வேளையில் இவருக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். மேலும் உள்ளே நடந்த சண்டைகளால் யார் மனதையாவது காயப்படுத்தியிருந்தால் எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.