16 வயதில் இருந்தே இந்த நடிகரை லவ் பண்றேன், அவர் மனைவிக்கே தெரியும்; த்ரிஷாவும் என் மகளும் ஒரே மாதிரி; ஐஸ்வர்யா ஓபன் டாக்;

நடிகை ஐஸ்வர்யா தான் 16 வயது முதல் காதலித்து வரும் நடிகர் குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா தான் 16 வயது முதல் காதலித்து வரும் நடிகர் குறித்து மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
AISHWARYA

16 வயதில் இருந்தே இந்த நடிகரை லவ் பண்றேன், அவர் மனைவிக்கே தெரியும்; த்ரிஷாவும் என் மகளும் ஒரே மாதிரி; ஐஸ்வர்யா ஓபன் டாக்;

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யா. பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் என்ற அடையாளத்தோடு திரைத்துறையில் நுழைந்த இவர் ‘நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ என்ற படத்தின் மூலம்  அறிமுகமானார். அதன்பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

Advertisment

தெலுங்கு படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக நடித்தார். அதைத்தொடர்ந்து கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ’ராசுகுட்டி’ படத்தில் நடித்து பிரபலமானார்.  ’தையல்காரர்’, ’உள்ளே வெளியே’, ’காசி’, ’பஞ்சதந்திரம்’, ’எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ’ஆறு’, ’பரமசிவம்’, ’பிரியசகி’, ’பழனி’, ’அபியும் நானும்’ என பல படங்களில் நடித்துள்ளார்.

ஆறு திரைப்படத்தில் இவர் நடித்த சவுண்டு சரோஜா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. மேலும் அபியும் நானும் திரைப்படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பு தாய் உள்ளங்களை நெகிழச் செய்தது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 

நடிகை ஐஸ்வர்யா தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், சமையல் செய்வது மற்றும் சில டிப்ஸ்களையும் கொடுத்து வருகிறார். இவர் அண்மையில் உடல் எடை குறைத்தது தொடர்பான டிப்ஸ்களையும் வழங்கியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா சின்னத்திரை தொடர்களிலும் நடித்ததாக கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா 16 வயதில் இருந்து தான் காதலித்து வரும் நடிகர் குறித்து யூடியூப் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது,  "பிரபு சாரை 16 வயதில் இருந்து காதல் செய்கிறேன். அவரது மனைவி புனிதாவிற்கும் இது தெரியும். பிரபு சார் வீட்டில் எல்லோருக்கும் இது தெரியும்.  எங்க அம்மா எப்படி சிவாஜி தாத்தாக்கு ரசிகையோ அதேபோன்று என் தலைமுறையில் நான் ‘அக்னி நட்சத்திரம்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ படம் பார்த்து  பிரபுவிற்கு ரசிகையானேன்” என்றார்.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: