ரூ. 1 கோடியில் சொகுசு கார் வாங்கிய பொன்னியின் செல்வன் பட நடிகை... போட்டோஸ் வைரல்!

நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி ரூ. 1 கோடியில் காஸ்ட்லியான புது சொகுசு கார் வாங்கியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி புது கார் வாங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி ரூ. 1 கோடியில் காஸ்ட்லியான புது சொகுசு கார் வாங்கியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி புது கார் வாங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
car aishwrya lekshmi

Picture Source: Instagram

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி ரூ. 1 கோடியில் காஸ்ட்லியான புது சொகுசு கார் வாங்கியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி புது கார் வாங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Advertisment

Aishwarya Lekshmi 1

இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் படகோட்டி பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. 

அண்மையில் நடிகை, ஐஸ்வர்யா லெட்சுமி ரூ. 1 கோடி மதிப்பில் மிகவும் காஸ்ட்லியான சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். 

நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ஆக்ஷன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா லெட்சுமி கேரளாவைச் சேர்ந்தவர். இவர் தொடர்ந்து தனுஷுடன் ஜெகமே தந்திரம், கார்கி, ஆர்யாவுடன் கேப்டன், மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

Advertisment
Advertisements

New car 3

அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் படகோட்டி பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்தத்ன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த, ஐஸ்வர்யா லெட்சுமி, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆஃப் கொத்தா படத்தில் ஹீரோயினாக நடித்து வெற்றி மேல் வெற்றி பெற்று வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார்.  

தற்போது, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் தக் லைஃஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்கிறார். மலையாளம், தமிழ் என இரு மொழி சினிமாக்களில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா லெட்சுமி ரூ. 1 கோடி மதிப்பில் காஸ்ட்லியான புது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். 

காஸ்ட்லியான range rover Evoque 2024 மாடல் காரை வாங்கி கேரள திரையுலகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். ஐஸ்வர்யா லெட்சுமி புது கார் வாங்கியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: