/indian-express-tamil/media/media_files/6IdUAd9OwRluniP7spqP.jpg)
நடிகை ஐஸ்வர்யா
நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடிகர் பிரபுவை நான் இப்பவும் லவ் பண்றேன், அவருடைய மனைவி புனிதா அக்காவுக்கே தெரியும் என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார். நடிகர் பிரபு மீது அவருக்கு இருக்கும் காதல் குறித்து ஐஸ்வர்யா ஓபனாக பேசியது ரசிகர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழம்பெரும் நடிகை லக்ஷ்மி - பாஸ்கரன் தம்பதியர் மகள்தான் நடிகை ஐஸ்வர்யா. தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா, தமிழில் நடிகர் சிவகுமார் நடிப்பில் வெளியான ‘நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.
ரஜினிகாந்த், சூர்யா, பிரகாஷ் ராஜ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து கவனத்தை ஈர்த்த நடிகை ஐஸ்வர்யா, சிறிய இடைவெளிக்குப் பிறகு, சின்னத்திரைகளிலும் நடித்து வருகிறார்.
நடிகை ஐஸ்வர்யா அளித்த பேட்டியில் பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார். நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் உடன் தனக்கு இருந்த நெருக்கம் மற்றும் பிரபு மீதான காதல் ஆகியவற்றை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா பேட்டியில் கூறியிப்பதாவது: “சூர்யா என்றே சொல்ல மாட்டேன். சிறு வயதில் இருந்து இப்போ வரைக்கும் சரவணன் என்று தான் அழைப்பேன். சரவணன் மற்றும் கார்த்தி உடன் தான் அதிகம் விளையாடி இருக்கேன். சிவகுமார் சார் சினிமாவை பற்றிய பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஐஸ்வர்யா தனது பேட்டியில், “16 வயதில் இருந்தே பிரபுவை தான் காதலிக்கிறேன். இன்னமும் அவர் எனக்கு டார்லிங் தான். இந்த விஷயம் அவரது மனைவி புனிதா அக்காவுக்கே தெரியும்” என்று ஜாலியாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார்.
பிரபு பற்றி பேசிய நடிகை ஐஸ்வர்யா கூறியிருப்பதாவது: “1986ம் ஆண்டு வெளியான பாலைவன ரோஜாக்கள் படத்தில் பிரபுவின் நடிப்பை பார்த்து மெய் சிலிர்த்துப் போய் விட்டேன். அப்போதிருந்தே பிரபு மீது அளவுக்கடந்த காதல். சுயம்வரம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணமே பிரபுவுடன் ஜோடியாக நடிக்கப் போகிறோம் என்பதால் தான். விஷால் நடித்த ஆம்பள படத்தில் நடிக்கும் போதும் அவரை நல்லா சைட் அடித்தேன் என்றேன். நடிகர் பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடியென்றே அவரிடம் சொல்லியிருக்கேன். அவர் அந்த காலத்துல அப்படியொரு அழகா இருப்பாரு. அவர் நடிப்பை பார்த்தால் சினிமாவில் பல நடிகைகளுக்கும் ஒரு மாதிரி ஆகிவிடும்” என்று கூறியுள்ளார்.
தனது சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா, “தெலுங்கில் நடிக்க கமிட் ஆன நேரத்தில் எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு ரோஜா படத்தில் நடிக்க வேண்டியது. தேவையில்லாமல் என் பாட்டியால அதை தொலைத்து விட்டேன். அதே போல, தளபதி படத்திலும் ஷோபனா நடித்த ரோலில் முதலில் என்னை நடிக்கத் தான் மணி சார் அழைத்தார். அந்த படத்தையும் மிஸ் செய்து விட்டேன்” என பெரிய வாய்ப்புகளை தவறவிட்ட வருத்தத்துடன் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.