பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருமகளான இவர் உலக அழகி பட்டம் வென்றவர்.

தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் 1997-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து அவுர் பியார் ஹோ கையா என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஜீன்ஸ் படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

கடைசியாக தமிழில் ரஜினிக்கு ஜோடியாக கடந்த 2010-ம் ஆண்டு எந்திரன் படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா 12 வருட இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஐஸ்வர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil