டார்க் ஜானரில் சொப்ன சுந்தரி.. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் என்ன?

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் சுழல் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் சுழல் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Actress Aishwarya Rajesh's Sobna Sundari film shooting has been completed

சொப்ன சுந்தரி படக்குழுவினருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் 'சொப்பன சுந்தரி'.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Advertisment

படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடிகைகள் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பின்னனி இசையை விஷால் சந்திரசேகர் கவனித்து கொள்கிறார்.
பாடல்களுக்கு அஜ்மல் இசையமைத்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 'எஸ். ஜி. சார்லஸ் டைரக்ட் செய்துள்ளார்.

இவர் ஏற்கனவே லாக்கப் என்ற படத்தை இயக்கியுள்ளார். சொப்ன சுந்தரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் சுழல் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.

Advertisment
Advertisements

சிறு வயதில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, அதை மறக்க சிகிச்சை பெற்றுக் கொள்வது, தான் பாதிக்கப்பட்டது போல் தன் தங்கையும் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிந்து துடிப்பது இறுதியில் வில்லனை வதம் செய்வது என நடிப்பில் அசத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aiswarya Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: