Actress Alia Bhatt says I am woman not a parcel: நடிகை ஆலியா பட் கர்ப்பமாக உள்ள நிலையில், அவரை கணவர் ரன்பீர் சூட்டிங்கிலிருந்து அழைத்து வரவுள்ளதாக வெளியான செய்திக்கு, நான் ஒரு பெண், பார்சல் அல்ல என கோபமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் ஆலியா பட்.
நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் கர்ப்பமான தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதி தங்கள் முதல் குழந்தையை சந்தோசமாக எதிர்நோக்கியுள்ளனர். இந்தநிலையில் மும்பைச் சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி, அவரை கோபமாக்கியுள்ளது. இதற்கு அவர் கோபமாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.
இதையும் படியுங்கள்: வீடியோ: அடையாளம் தெரியாதபடி நின்ற மாதவன்… அசந்து போன சூர்யா!
மும்பையில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் ஆலியாவைப் பற்றி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், “நடிகை ஆலியா பட் தனது முதல் கர்ப்பத்தை அறிவித்த பிறகு திங்கள்கிழமை காலை இணையத்தில் புயலை கிளப்பினார். வருங்கால அம்மா ஜூலை நடுப்பகுதியில் மும்பை திரும்புவார் என்று கூறப்படுகிறது. ரன்பீர் கபூர் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வர இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா டுடே அறிக்கைப்படி, ஆலியா தனது படப்பிடிப்பில் இருந்து திரும்பிய பிறகு ஓய்வெடுக்க உள்ளார். நடிகை தனது திரைப்பட சூட்டிங்குகளை பாதிக்காத வகையில் தனது கர்ப்பத்தைத் திட்டமிட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. ஆலியா பட் தனது ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ மற்றும் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ ஆகிய படங்களை ஜூலை இறுதிக்குள் முடிக்கவுள்ளார்.” என்று பதிவிட்டது.
இந்தப் பதிவை பார்த்த ஆலியா பட் கோபமடைந்து, "நான் எடுத்து வர வேண்டிய பார்சல் அல்ல" என்று எதிர்வினையாற்றியுள்ளார்.
ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நாம் இன்னும் சிலரின் தலையில் வாழ்கிறோம். நாம் இன்னும் ஆணாதிக்க உலகில் வாழ்கிறோம். ஆனால், எதுவும் தாமதமாகவில்லை. யாரும் யாரையும் அழைத்து செல்ல தேவையில்லை. நான் ஒரு பெண், பார்சல் அல்ல. நான் ஓய்வெடுக்கத் தேவையில்லை, ஆனால் உங்கள் தகவலுக்கு, மருத்துவரின் சான்றிதழும் இருக்கும் என்பதை அறிவது நல்லது. இது 2022. தயவுசெய்து இந்த பழமையான சிந்தனையிலிருந்து வெளியேற முடியுமா? இப்போது நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஏனென்றால், எனது படப்பிடிப்பு தயாராக உள்ளது.” எனப் பதிவிட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/alia-insta.jpg)
ஆலியாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil