அரைகுறை ஆடையில் சோம்பல் முறிக்கும் ஆலியா பட்: டீப்ஃபேக் வீடியோ வைரல்

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ வெளியாகி அதிர்வைலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது, நடிகை ஆலியா பட்டின் டீப்ஃபேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ வெளியாகி அதிர்வைலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது, நடிகை ஆலியா பட்டின் டீப்ஃபேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Alia bhatt fitness

நடிகை ஆலியா பட் டீப்ஃபேக் வீடியோ வைரலாகிவருகிறது

artificial-intelligence | cinemaநடிகைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலான டீப் ஃபேக் தொழில்நுட்ப காணொலிகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இந்தக் காணொலிகளால் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் மற்றும் கஜோல் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நடிகைகளின் போலியான ஹாட் காணொலிகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

Advertisment

Rashmika and Zara

இதைத் தொடர்ந்து, இந்தப் பட்டியலில் தற்போது அலியா பட்டும் இதில் சிக்கியுள்ளார். படுக்கையறையில் அவர் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் அந்தப் பெண் ஆபாச செய்கைகள் செய்கிறார். அந்தப் பெண்ணின் முகத்துடன் நடிகை ஆலியா பட் புகைப்படம் டீப்ஃபேக் தொழில்நுட்ப உதவியுடன் மார்பிங் செய்யப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது; சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது.

Alia Bhatt underwater photo shoot

இதற்கிடையில் ஆலியா பட்டின் காணொலி வெளியாகி உள்ளது. இந்த டீப்ஃபேக் தொழில்நுட்பம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், “இதனை கட்டுப்படுத்த தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தக் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்தவாரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Artificial Intelligence Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: