New Update
/indian-express-tamil/media/media_files/j1qWPevnVeVVPGVd6xwQ.jpg)
நடிகை ஆல்யா மானசா மகள் ஐலா பாப்பா க்யூட்டாக ட்ரம்ஸ் வாசிக்கும் வீடியோ
நடிகை ஆல்யா மானசா ஸ்டார்ட் என்று கூறியதும் அவருடைய மகள் ஐலா பாப்பா ட்ரம்ஸ் வாசிக்கிறார்.
நடிகை ஆல்யா மானசா மகள் ஐலா பாப்பா க்யூட்டாக ட்ரம்ஸ் வாசிக்கும் வீடியோ
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா மகள் ஐலா பாப்பா க்யூட்டாக ட்ரம்ஸ் வாசிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஆல்யா மானசா. இந்த சீரியலில் ஆல்யா மானசாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகர் சஞ்சீவ் கார்த்திக். இருவரும் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக் தம்பதிகளுக்கு 1 மகள் 1 மகன் உள்ளனர். ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக் இருவருமே சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகை ஆல்யா மானசா தனது மகள் ஐலா க்யூட்டாக எலக்ட்ரானிக்ஸ் ட்ரம்ஸ் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில், ஆல்யா மானசா ஸ்டார்ட் என்று கூறியதும் அவருடைய மகள் ஐலா பாப்பா ட்ரம்ஸ் வாசிக்கிறார்.
ஆல்யா மானசா மகள் ஐலா பாப்பா க்யூட்டாக ட்ரம்ஸ் வாசிக்கும் வீடியோ இன்ஸ்டாவை கலக்கி வைரலாகி வருகிறது. ஐலா பாப்பா எவ்வளவு அழகாக ட்ரம்ஸ் வாசிக்கிறார் என நீங்களே பாருங்கள்.
சஞ்சீவ் கார்த்திக்கும் தனது மகள் ஐலா பாப்பா ட்ரம்ஸ் வாசிக்கும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.