ஆல்யா மானசா செய்த தப்பு; பொத்தென்று விழுந்த ஐலா: அப்புறம் வந்ததே கோபம்..!

ஆல்யா தனது மகள் ஐலாவின் சேட்டைகள் தொடர்பான கியுர்ட் வீடியோ என்று தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆல்யா மானசா செய்த தப்பு; பொத்தென்று விழுந்த ஐலா: அப்புறம் வந்ததே கோபம்..!

சின்னத்திரையில் நட்சத்திர காதல் தம்பதிகளாக வலம் வருபவர்கள் சஞ்சீவ் ஆல்யா மானசா. விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் அறிமுகமாக ஆல்யா அந்த சீரியலில் நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்

இந்த தம்பதிக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், ராஜா ராணி சீரியலில் 2-வது சீசனில் நடித்து வந்த ஆல்யா மீண்டும் கர்ப்பமானார். ஆனாலும் தனது 9-வது மாதம் வரை அந்த சீரியலில் தொடர்ந்து நடித்த அவர், பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அதில் இருந்து விலகியது அனைவரும் அறிந்த ஒன்று.

தொடர்ந்து அவருக்கு 2-வது ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு அர்ஷ் என்று பெயரிட்டுள்ளனர். குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில். ஆல்யா எப்போது சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதே சமயம் ஆல்யா சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் இணைப்பில் உள்ளார்

விரைவில் சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆல்யா தனது மகள் ஐலாவின் சேட்டைகள் தொடர்பான கியுர்ட் வீடியோ என்று தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஆல்யா ஐலாவுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஆல்யா செய்த தவறால் குழந்தை கீழே விழுந்துவிடுகிறது. .

இதனால் கோபப்படும் குழந்தை ஐலா, தனது அம்மா ஆல்யாவை செல்லமாக அடிக்கிறார். அம்மா மகள் பாசம் தொடர்பான இந்த வீடியோ காட்சி இணையத்தில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress alya manasa playing with her daughter video on social media

Exit mobile version