scorecardresearch

இந்தி பாடகருடன் அமலாபால் திருமணம்? ‘லீக்’ ஆன வண்ணப்படங்கள்

தலைவா படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் விஜய் மேல் காதல் வயப்பட்டு, பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்ட அமலாபால், குறுகிய காலத்திற்குள்ளேயே மனக்கசப்பு அடைந்து விவாகரத்து பெற்றார். இவர்களின் திருமணம் குறித்து விஜய்யின் தந்தை ஏ.ஏல்.அழகப்பன் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி சமூக தளங்களில் வலம் வந்தன, இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், தனது காதலர் குறித்த எந்தவொரு விவரத்தையுமே அமலாபால் வெளியிடவே […]

actress amala paul 2nd marriage confusion photos
தலைவா படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் விஜய் மேல் காதல் வயப்பட்டு, பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்ட அமலாபால், குறுகிய காலத்திற்குள்ளேயே மனக்கசப்பு அடைந்து விவாகரத்து பெற்றார்.

இவர்களின் திருமணம் குறித்து விஜய்யின் தந்தை ஏ.ஏல்.அழகப்பன் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி சமூக தளங்களில் வலம் வந்தன,

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், தனது காதலர் குறித்த எந்தவொரு விவரத்தையுமே அமலாபால் வெளியிடவே இல்லை. இது குறித்த கேள்விக்குக் கூட “அது என் பெர்சனல் விஷயம்” என்று மட்டுமே பதிலளித்து வந்தார்.

இதனிடையே புவனிந்தர் சிங் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமலாபாலைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார்.

அதனுடன் ‘Wedding Throwback’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இவர் மும்பையைச் சேர்ந்த பாடகர் என்று தகவல் வெளியானது.

ஆனால், புகைப்படங்களை வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார். உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இது திருமணமா அல்லது திருமணத்துக்கு முந்தைய போட்டோ ஷூட்டா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் சார்பாக, அமலா பால் பிஆர்ஓ-வுடன் பேசினோம். அவர், “எங்களால் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. அமலா பாலின் மேனேஜரும் தொலைபேசியை எடுக்கவில்லை. அவருடன் பேசிய பிறகு தான் தெரிய வரும்” என்று தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress amala paul 2nd marriage confusion photos