New Update
/
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை அமலா பால், ஆடை, கடாவர் போன்ற கதாநாயகிப் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
இயக்குனர் ஏ.எல். விஜய் உடனான மண முறிவுக்குப் பிறகு, சினிமாவில் கவனம் செலுத்தி வந்த நடிகை அமலா பால், கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் நண்பர் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
நடிகை அமலா பால், கர்ப்பமாக இருக்கும் நிலையில், தனது கர்ப்ப காலத்தை கணவருடன் கொண்டாடி வருகிறார். மலையில் யோகா செய்வது, நீச்சல் குளத்தில் குளிப்பது என்று அமலா பால் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலானது.
தற்போது 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் நடிகை அமலா பால், கிளப் ஒன்றில் கணவருடன் சேர்ந்து நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து அமலா பால் குறிப்பிடுகையில், “ஏழாவது மாதத்தை நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பால் கிளப்பில் நடனம் ஆடும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், சில நெட்டிசன்கள் நடிகை நடிகை அமலா பாலுக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
நெட்டிசன்கள் இந்த வீடியோ பக்கத்துக்கு சென்று “7 மாதம் கர்ப்பிணியாக இருக்கும்போது இப்படி நடனம் ஆடலாமா?” என்று கேட்டு கமெண்ட் செய்து வருகின்றானர். சிலர், அவருடைய வயிற்றில் இருக்கும் குழந்தை நன்றாக என்ஜாய் செய்யும் என்று தெரிவித்து வருகின்றனர்.
கர்ப்பிணியாக இருக்கும் நடிகை அமலா பால் தனது 7வது மாதத்தை கிளப்பில் டான்ஸ் ஆடி கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.