கையில் பாட்டில்… கலக்கல் டான்ஸ்… அமலா பால் என்ன இப்படி இறங்கிட்டாங்க!

அமலா பால் கையில் மது பாட்டில் உடன் கலக்கலாக டான்ஸ் ஆடியதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், என்ன அமலா பால் இப்படி இறங்கிட்டாங்க என்று கம்மெண்ட் செய்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

actress Amala Paul dancing with liquor bottle, amala paul dance in her brother bachelor party, amala paul dancing viral video, அமலா பால் டான்ஸ் வீடியோ, கையில் மது பாட்டில் உடன் அமலா பால் டான்ஸ், அமல பால் டான்ஸ் வைரல் வீடியோ, amala paul dance in party, amala paul dacing video, tamil cinema news, tamil actress amala paul

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால் தனது சகோதரரின் பேச்சிலர் பார்ட்டியில் கையில் மதுபாட்டிலுன் டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அமலா பால் கையில் மது பாட்டிலுடன் நடனம் ஆடுவதைப் பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி இறங்கிட்டாங்க என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா உலகில் வீரசேகரன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பால் விரைவிலேயே தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய சினிமாக்களிலும் நடித்து பிரபலமானார். அது மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா, ஆகியோரின் படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் விரைவிலேயே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

அமலா பால் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக ஹீரோயினாக மட்டுமல்லாமல், தனியாக ஹீரோயினை மையப்படுத்திய படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் ஆடை திரைப்படத்தில் அமலா பால் ஆடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆடை படத்திற்கு பிறகு, அமலா பால், காடவர் போன்ற ஹீரோயினை மட்டுமே மையபடுத்திய படங்களில் நடித்து வருகிறார். தற்போது, இந்தியில் சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். அதே நேரத்தில் சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் தொடர்ந்து புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை அமலா பாலின் சினிமா வாழ்க்கையில் அவருடைய வெற்றிகளுக்கு எல்லாம் பக்க பலமாக இருப்பவர் அவருடைய சகோதர் அபிஜித் பால். இவர் தனது காதலியை கரம்பிடிக்கிறார். அதனால், அபிஜித் பால் திருமணத்திற்கு முன்னதாக தனது நண்பர்களுக்கு கொடுத்த பேச்சிலர் பார்ட்டியில் அவருடைய சகோதரி நடிகை அமலா பால் பங்கேற்றுள்ளார்.

சகோதரர் அபிஜித் பால் உடைய பேச்சிலர் பார்ட்டியில் கலந்துகொண்ட அமலா பால், கையில் மது பாட்டிலுடன் ஜாலியாக டான்ஸ் ஆடியுள்ளார். பேச்சிலர் பார்ட்டியில் அமலா பால் டான்ஸ் ஆடிய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமலா பால் கையில் மது பாட்டில் உடன் கலக்கலாக டான்ஸ் ஆடியதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், என்ன அமலா பால் இப்படி இறங்கிட்டாங்க என்று கம்மெண்ட் செய்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அமலா பாலின் ரசிகர்கள் சிலர், இந்த வீடியோவில், அமலா பால் டான்ஸ் ஆடும்போது செய்யும் சில சேட்டைகளை ரசித்து க்யூட்டாக இருப்பதாக கம்மெண்ட் செய்து வருகின்றனர். எப்படி இருந்தாலும், நடிகை அமலா கையில் பாட்டிலுடன் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress amala paul dancing with liquor bottle in her brother bachelor party viral video

Next Story
பாம்பு மாதிரி ஊர்ந்து… ‘சீரியல் நடிகையிடம் அப்பா நடிகர் செய்யுற வேலையா இது?’
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X