Advertisment

கிறிஸ்தவ நிறுவன கல்லூரி விழாவுக்கு கவர்ச்சி ஆடையில் வந்த அமலா பால்: 'இது நடன பார் அல்ல' என எதிர்ப்பு

“நடிகை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், அவர் ஒரு கிறிஸ்தவ மேலாண்மை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார்“ என நடிகை அமலா பாலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
amala paul

தனது ஆடை மீதான விமர்சனம் குறித்து நடிகை அமலா பால் விளக்கம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாக்குளத்தில் சமூக நடவடிக்கைக்கான கிறிஸ்தவ சங்கம் மற்றும் கூட்டணி என்ற அமைப்பின் கீழ் புனித ஆல்பர்ட் கல்லூரி இயங்கிவருகிறது. இந்த கல்லூரியில் நடந்த, லெவல் கிராஸ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் கலந்துகொண்டார்.

Advertisment

அப்போது அவர் அணிந்திருந்த ஆடை கவர்ச்சியாக இருந்ததாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் சமூக நடவடிக்கைக்கான கிறிஸ்தவ சங்கம் மற்றும் கூட்டணி தரப்பில், “நீங்கள் மும்பையில் உள்ள நடன பார் திறக்க செல்லவில்லை; இது கிறிஸ்தவ கல்லூரி. சரியான ஆடை அணிந்து கலந்திருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சர்ச்சைக்கு விளக்கம் அளித்த நடிகை அமலா பால், “நான் என் விருப்பப்படி எனக்கு பொருத்தமான ஆடையை அணிந்திருந்தேன். அந்த ஆடையில் கவர்ச்சியோ அல்லது ஆபாசமோ இல்லை. ஒருவேளை கேமராவில் சில புகைப்படங்கள் அவ்வாறு பதிவாகி இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment