New Update
/indian-express-tamil/media/media_files/Fcela4eClMEyjCpjHUia.jpg)
காதலர் ஜகத் தேசாய் உடன் அமலா பால் திருமணம்; புகைப்படங்கள் வைரல்
காதலர் ஜகத் தேசாய் உடன் அமலா பால் திருமணம்; புகைப்படங்கள் வைரல்
Amala Paul Marriage Photos: நடிகை அமலா பால் காதலர் ஜகத் தேசாய் உடன் கோலாகலமாக திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளிட்டுள்ளார். அமலா பாலின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் 'நீலத்தாமரா' என்ற திரைப்படம் மூலம் நடிகை அமலா பால் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார். மைனா திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார்.
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், ஆர்யா, தனுஷ், சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து 2014-ம் ஆண்டு திருமணம் செய்த அமலா பால், கருத்து வேறுபாடு காரணமாக, 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று அவரை விட்டு பிரிந்தார்.
விவாகரத்துக்கு பிறகு சிங்கிளாக இருந்த அமலா பால், ஆடை, கடாவர் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்தார்.
கடந்த அக்டோபர் 26-ம் தேதி தனது 32வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை அமலா பால் இடம், அவருடைய நெருங்கிய நண்பர் ஜகத் தேசாய் தனது காதலை தெரிவித்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அமலா பால், நண்பரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில், தனது நண்பரும் காதலருமான ஜகத் தேசாயை திருமணம் செய்துகொண்டார்.
அமலா பால் - ஜகத் தேசாய் திருமணம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு, இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
அமலா பால் தனது காதலர் ஜகத் தேசாயை திருமணம் செய்துகொண்ட புகைப்படம் சமூக வளைதங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வைரலாக்கி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.