Advertisment
Presenting Partner
Desktop GIF

கர்ப்பமாக இருக்கும்போது மலை மீது ஏறி யோகா... கணவருடன் விடுமுறையைக் கொண்டாடும் அமலா பால்!

நடிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கும் நிலையில், மலை மீது ஏறி யோகாசனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். தனது கணவருடன் விடுமுறையைக் கொண்டாடிவரும் அமலா பால், இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Amala Paul

நடிகை அமலா பால்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கும் நிலையில், மலை மீது ஏறி யோகாசனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். தனது கணவருடன் விடுமுறையைக் கொண்டாடிவரும் அமலா பால், இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை அமலா பால். அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிந்துசமவெளி படம் தொடங்கி ஆடை படம் வரை சர்ச்சைகளுடனே வலம் வருபவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார்.

நடிகை அமலா பால், கடந்த ஆண்டு நவம்பரில் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அமலா பால், தனது கணவருடனான மகிழ்ச்சியான தருணங்களை இன்ஸ்டாகிராமில் புகைபடங்களாகவும் வீடியோக்களாகவும் பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்து வருகிறார். 

அண்மையில், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நடிகை அமலா பால், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். அமலா பால் விடுமுறையை தனது கணவருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடிவருகிறார். 

கர்ப்பாமாக இருக்கும் நடிகை அமலா பால் உயரமான மலை மீது ஏறி பாறை ஒன்றில் யோகாசனம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோ குறித்து அமலா பால் குறிப்பிடுகையில், “கர்ப்ப காலத்தில் மலை ஆசனம் அழகாக இருக்கிறது. இந்த யோகாவை இடுப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு மந்திரமாக கருதுகிறேன்.

நீண்ட கடற்கரையில் உடற்பயிற்சி செய்வது. சூரிய அஸ்தமனத்தை வெறுங்காலுடன் பார்ப்பது, கர்ப்ப நேரத்தில் ஏற்படும் குமட்டலுக்கு சிறந்த சிகிச்சையாக இருக்கும். எனது கால்கள் மணலையும், உப்பு நீரையும் தொடும் போது அதை ஒரு அதிசய மருத்துவ குணமாக கருதுகிறேன். பொறுப்பு துறப்பு: இந்த யோகாவை செய்வதற்கு முன்பாக மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுளார். 

மேலும்,   “ஜெகத் தேசாய் சிறந்த கணவர் மற்றும் சிறந்த நண்பர், எனது ஓட்டத்தில் என்னைத் தடுக்காமல் என் நடவடிக்கைகளை கவனமாகக் கவனிக்கிறார். ஆசிர்வதிக்கப்பட்டவர்” என்று தனது கணவரையும் புகழ்ந்துள்ளார்.

அதுமட்டுமல்ல, அமலா பால் மற்றும் அவருடைய கணவர் ஜெகத் தேசாய் இருவரும் நீச்சல் குளத்தில் குளிக்கும் ரொமாண்டிக்கான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

நடிகை அமலா பால் முதலில் இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்துகொண்டார். பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்குப் பிறகு, சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய அமலா பால், தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில், தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலா பால் விடுமுறையைத் தனது கணவர் ஜெகத் தேசாய் உடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார். அமலா பால் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்கும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment