இந்த லெள்ளு இங்க வேணாம்; கேப்டன் பிரபாகரன் தான் புஷ்பா: நடிகை அம்பிகா சேலஞ்ச்

'கேப்டன் பிரபாகரன்' படத்தின் ரீரிலீஸின் போது நடிகை அம்பிகா ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்தனர். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை அம்பிகா பேசியது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

'கேப்டன் பிரபாகரன்' படத்தின் ரீரிலீஸின் போது நடிகை அம்பிகா ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்தனர். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை அம்பிகா பேசியது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
download (22)

நடிகர் விஜயகாந்தின் 100வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் மற்றும் நடிகை அம்பிகா ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்தனர். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை அம்பிகா பேசியது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

அம்பிகா "இந்த படம் பல வருடங்கள் கழித்து திரையரங்குகளில் மீண்டும் வெளியானாலும், ரசிகர்கள் அதை முதன்முறையாக பார்க்கும் போல் அளிக்கும் ஆதரவைப் பார்த்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்றைய திரைப்படங்களில் பலவகையான கிராபிக்ஸ், சிஜிஐ ஆகிய தொழில்நுட்பங்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் எந்தக் கிராபிக்ஸும் இல்லை; அதில் நடித்த நடிகர்கள், குதிரைகள் உள்ளிட்ட அனைத்தும் இயற்கையாகவே, நேரடியாகப் படமாக்கப்பட்டவை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்," எனத் தெரிவித்தார்.

"இந்த படத்திற்கு முதல் முறை எந்த வசனத்திற்கு எல்லாம் கைதட்டல் கிடைத்ததோ, அதேபோல இப்போது ரீ-ரிலீஸ் ஆகி இருக்கும்போதும் ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். இது பார்ப்பதற்கே வியப்பாகவும் இருக்கிறது" என்று அம்பிகா ஆச்சரியத்துடன் கூறினார். மேலும், "இந்த படத்தை விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுடன் பார்ப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

அப்போது ஒரு செய்தியாளர், "'கேப்டன் பிரபாகரன்' படத்தைக் 'புஷ்பா' படத்துடன் ஒப்பிடுகிறார்கள் என்று சொல்கிறார்கள், அது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டார். அதற்கு அம்பிகா பதிலளித்துள்ளார். 

"யார் இப்படிச் சொல்லுகிறார்? ஒப்பிட வேண்டுமென்றால், 'புஷ்பா' தான் 'கேப்டன் பிரபாகரனை' மாதிரிதான் உள்ளது என்று கூறுங்கள். ஏனெனில், எது முதலில் வந்த படம்? 'கேப்டன் பிரபாகரன்' எந்தொரு படத்தையும் பார்த்து எடுத்ததல்ல. இதுபோன்ற சித்திரவதைகள் வேண்டாம், இப்படி ஒப்பிடுவதெல்லாம் தேவையில்லை" என்று அவர் கூறினார்.

'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் தனது முதற்கால வெளியீட்டில் பெரும் வசூல் சாதனையை பெற்றது. அதுபோலவே, இப்போது மீண்டும் வெளியானதிலும் சிறந்த வரவேற்புடன் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 

திரும்பவும் அதே உச்ச உழைப்புடன் ரசிகர்கள் திரண்டனர். ஹவுஸ்புல் ஆன அந்த காட்சியில், விஜயகாந்தை முதல் முறையாகப் பார்க்கும் போலவே ரசிகர்கள் ஆர்வமாக ஆரவாரம் செய்து, விசில் அடித்து உற்சாகம் தெரிவித்தனர்.

அம்பிகா, மன்சூர் அலிகான் ஆகியோரின் இந்த கருத்துக்கள், விஜயகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகினரிடையும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: