/indian-express-tamil/media/media_files/vXlvcQaFrpCWP2GOknKs.png)
நடிகை அம்பிகா சென்னையில இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
ambika Press Meet |நடிகை அம்பிகா சென்னையில இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தேர்தலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார். இதற்கிடையில் குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், இதற்கு முன்பு பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லையா? எனப் பதில் கேள்வி கேட்டார்.
இதற்குப் பதிலளித்த அம்பிகா, “குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கக் கூடாது என்றார். தொடர்ந்து, பெண் இயக்குனர்கள் பற்றிய கேள்விக்கு தயாரிப்பாளர் பயம் என பல பிரச்னைகள் இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில், சென்னையில் குடியிருந்து சின்னத்திரை மற்றும் பெரியத் திரையில் நடித்து வருகிறேன் என்றார். இதையடுத்து அரசியல் கட்சி தொடங்கும் நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
நல்லதே செய்யுங்கள், நல்லதே நடக்கும் என்றார். முன்னதாக தாம் சென்னையில் தான் இருப்பதாகவும், கடவுள் நடிக்க உடலில் தெம்பு கொடுக்கும்வரை நடிப்பேன் எனவும் கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை குறித்து நடிகை குஷ்பு பேசியது வைரலானது. இதற்குப் பதிலடி கொடுத்த அம்பிகா, “மக்களுக்கு ஆதரவைாக இருந்து அரசின் திட்டங்களை பாராட்ட நினைத்தால் பாராட்டுக்கள்.
பாராட்ட மனமில்லை என்றால் அமைதியாக இருங்கள். பிச்சை என்று அவமானப்படுத்தும் சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று கடுமையாக விமர்சித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.