கோவையில் நகைக் கடையை திறந்துவைத்த நடிகை அம்ரிதா ஐயர்
கோவை மாவட்டம் மருதமலை சாலையில் உள்ள பி.என் புதூரில் நகைக்கடை ஒன்றை திறந்துவைத்த நடிகை அம்ரிதா ஐயர், முதல் விற்பனையையும் தன் கைகளால் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நான் தற்போது ஹனுமன் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன்.
Advertisment
நகைக் கடையில் விற்பனையை தொடங்கிவைத்த நடிகை அம்ரிதா ஐயர்
தமிழ் படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமை உள்ள நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
கோவைக்கு நான் சிறுவயதிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். கல்லூரி படிக்கும் போது பலமுறை கோவை வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் வரும் போதும் புது அனுபவமாக உள்ளது.
Advertisment
Advertisements
எனக்கு கோவை உணவு என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் கோவை உணவை ருசிப்பதில் ஆர்வமாக இருப்பேன்” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/