/tamil-ie/media/media_files/uploads/2019/11/VK679Em.jpg)
Amy Jackson Motherhood Photos
Amy Jackson : லண்டனைச் சேர்ந்த நடிகை ஏமி ஜாக்சன் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசபட்டினம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் 'ஐ', தனுஷுடன் 'தங்கமகன்', விஜய்யுடன் 'தெறி', ரஜினிகாந்துடன் '2.0' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் வெற்றி பெற்ற ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி ரீமேக்கான 'ஏக் தீவானா தா' படத்திலும் நடித்தார்.
பின்னர் வேறெந்த படங்களிலும் ஒப்பந்தமாகாத ஏமி, காதலர் ஜார்ஜ் பனாயோது என்ற தொழிலதிபருடன் வாழ்ந்து வந்தார். அதனைத் தொடர்ந்து கர்ப்பமான ஏமி ஜாக்சனுக்கு 2020-ல் இத்தாலியில் திருமணம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் திருமணத்திற்கு முன்பு குழந்தைப் பெற்றுக் கொள்வது சாதாரணமான ஒன்று. தான் கர்ப்பமாக இருப்பதை உலக அன்னையர் தினத்தில் உலகுக்கு தெரிவித்த ஏமி ஜாக்சன், அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம், வயிற்றிலிருந்த தன் குழந்தையை ரசிகர்களுக்கு பரிச்சயப்படுத்தினார். இதற்கிடையே செப்டம்பர் 23-ல் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆண்ட்ரியாஸ் ஜேக்ஸ் பனாயோது என அந்தக் குழந்தைக்கு பெயரிட்டுள்ளனர்.
குழந்தை பிறந்ததை அறிவித்த போது...
’இவன் ரொம்ப க்யூட்’ என்ற தலைப்பில், ஏமி வெளியிட்ட படம்...
மகனுக்கு ‘ஆண்ட்ரியாஸ்’ன்னு பேர் வச்சிருக்கோம்ன்னு சொன்ன போது...
என்ன விட்டு இருக்கவே மாட்டான்...
குழந்தையுடன் ஓர் செல்ல உரையாடல்...
உனக்காக என்ன வேணும்ன்னாலும் செய்வேன்...
என் வாழ்க்கையின் வெளிச்சம்!மருத்துவமனையில் தனக்குப் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, தனக்கு குழந்தை பிறந்ததை அறிவித்தார் ஏமி. அதோடு, மேலை நாடுகளில் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்பதை விழா போலவே கொண்டாடி அறிவிப்பார்கள். அதே போன்று தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் விஷயத்தை விழாவில் கூறி மகிழ்ந்தார் ஏமி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us