பிரபல நடிகை எமி ஜாக்சனின் மகன் அவரிடம், “நீங்கள் ஏன் அம்மா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள்” என்று கேள்வி கேட்டதாகவும், அவர் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் , விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை எமி ஜாக்சன். இவர் சமிபத்தில், நடிகர் அருண் விஜய் உடன் நடித்த ‘மிஷின் சாப்டர் ஒன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுள்ளது.
நடிகை எமி ஜாக்சன் கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்து தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2019-ம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். ஆனால், அதன் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, எமி ஜாக்சன், தனது கணவரை விட்டுப் பிரிந்தார்.
/indian-express-tamil/media/media_files/MViEGAaeweujUl9bC6us.jpg)
தற்போது நடிகை எமி ஜாக்சன் எட் வெஸ்டிக் என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில், நடிகை எமி ஜாக்சன் சுவிட்சர்லாந்தில் தனது காதலரிடம் காதலை ப்ரொபோஸ் செய்த புகைப்படம் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலானது.
/indian-express-tamil/media/media_files/n7sagakZroNKa2ySeihz.jpg)
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை எமி ஜாக்சன், “எனது மகனும் எனது காதலரும் மிகச் சிறந்த நண்பர்களாக உள்ளார்கள், என்னிடம் நீங்கள் ஏன் அம்மா திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டதில் இருந்து எனது மகன் எனது காதலை புரிந்து கொண்டான் என்றே நான் எண்ணுகிறேன். அதேபோல் என் காதலரிடம் ‘என் அம்மாவை இன்னும் ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் கேட்டுள்ளான். எனவே, எங்கள் காதலுக்கு என் மகன் சிக்னல் கொடுத்துவிட்டதை அடுத்து விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“