New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/New-Project-2021-05-18T210155.878.jpg)
நடிகை சௌந்தர்யா தனக்கு ஆபாசமாக மேசேஜ் அனுப்பிய கல்லூரி பேராசிரியரை துணிச்சலாக பொதுவெளியில் அம்பலப்படுத்தி அவருக்கு பாடம் புகட்டியுள்ளார்.
சீரியல் நடிகையும் பாடகியுமான சௌந்தர்யா தனக்கு கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதை பொதுவெளியில் அம்பலப்படுத்தி அவருக்கு பாடம் புகட்டியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சௌந்தர்யா. இதையடுத்து அவர் தற்போது சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துவருகிறார்.
நடிகை சௌந்தர்யாவுக்கு கடந்த சில தினங்களாக மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். அந்த நபர் ஒரு கல்லூரி பேராசிரியர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து நடிகை சௌந்தர்யா அந்த நபரை பொதுவெளியில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டியுள்ளார்.
இதுகுறித்து சௌந்தர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “இதுதான் ஒரு பேராசிரியர் பெண்களிடம் பேசும் முறையா? மிகவும் கேவலமாக உள்ளது. இவர் மதுரையில் பணியாற்றுவதாக அவர் இன்ஸ்டாகிராம் கணக்கு கூறுகிறது. இவரைச் சுற்றியுள்ள கல்லூரி மாணவிகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். இவர் யார் என்பதை கண்டறிந்து, உரிய முறையில் இவர்மீது புகாரளிப்பேன். இவர் தற்போது என்னை ப்ளாக் செய்துவிட்டார். இருப்பினும், அவர் வேலை பார்க்கும் கல்லூரி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை கொடுக்க போதுமான விவரங்கள் என்னிடம் உள்ளன. பொறுப்பான இடத்தில் இருந்துகொண்டு பெண்களிடம் இவ்வாறு பேசியது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் உணர்வதற்கு நான் முயற்சிகள் எடுப்பேன். அவர் நிச்சயம் இதற்கான தண்டனையை அனுபவிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை சௌந்தர்யா தனக்கு ஆபாசமாக மேசேஜ் அனுப்பிய கல்லூரி பேராசிரியரை துணிச்சலாக பொதுவெளியில் அம்பலப்படுத்தி அவருக்கு பாடம் புகட்டியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.