scorecardresearch

ஸ்வீட் கேக்… செம க்யூட் டான்ஸ்! ஆன்ட்ரியா- ஐஸ்வர்யா ராஜேஷ் லூட்டி

வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஒன்றாக நடித்து கலக்கிய நடிகைகள் ஆண்ட்ரியா – ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கேக் செய்து வெட்டி க்யூட்டாக டான்ஸ் ஆடி கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

actress andrea, actress aishwarya rajessh, andrea aishwarya rajessh cuts cake, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், வைரல் வீடியோ, ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கேக் வெட்டிய வீடியோ, andrea aishwarya rajessh celebration, andrea aishwarya rajessh celebration video, viral video, vada chennai

வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஒன்றாக நடித்து கலக்கிய நடிகைகள் ஆண்ட்ரியா – ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கேக் செய்து வெட்டி க்யூட்டாக டான்ஸ் ஆடி கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவாரான வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வட சென்னை படத்தில் நடிகை ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இரண்டு நடிகைகளுமே இன்றைய சூழலில், சவாலான பாத்திரங்களை வெற்றிகரமாக நடித்து வருகின்றனர். வட சென்னை படத்தின்போது நல்ல தோழிகளான ஆண்ட்ரியாவும் ஐஸ்வர்யா ராஜேஷும் தாங்களே கேக் செய்து வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

 

View this post on Instagram

 

???? @aishwaryarajessh

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on


நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆண்ட்ரியா ரொம்பவும் அழகான கேக் செய்து கொண்டுவந்து டைனிங் டேபிளில் வைக்கிறார். அவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் உள்ளார். பிறகு, 2 பேரும் பாடலுக்கு ஆட்டம் ஆடி ஜாலியாக ஃபன் செய்து கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். இதையடுத்து ஆண்ட்ரியா ஒரு துண்டு கேக் எடுத்து சுவைத்துப் பார்க்கிறார்.

இப்படி முன்னணி நடிகைகள் கேக் வெட்டி ஜாலியாக கொண்டாடிய வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பார்த்த, ரசிகர்கள் எங்களுக்கும் கொடுங்கள் என்று கேட்டு வருகின்றனர். இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress andrea aishwarya rajessh cuts cake celebration video