New Update
/indian-express-tamil/media/media_files/AilVg35usL9SLWCkeCCm.jpg)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
நடிகை ஆண்ட்ரியா திடீரென திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
நடிகை ஆண்ட்ரியா திடீரென திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவாக வலம் வரும் நடிகை ஆண்ட்ரியா, தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல், சினிமாவில் பாடல்களும் பாடி உள்ளார். 40 வயது ஆகும் நடிகை ஆண்ட்ரியா இன்னும் அதே இளமையுடன் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். நடிகை ஆண்ட்ரியா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
தமிழ் சினிமாவில் 2005-ம் ஆண்டு வெளியான, 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா, இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் கவனம் பெற்றார்.
அதற்கு பிறகு, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி, ரீமாசென் நடித்திருந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து, ரசிகர்களைக் கவர்ந்தார்.
இதைத் தொடர்ந்து, வட சென்னை படத்தில், அமீர் மனைவியாக நடித்து கலக்கினார். இந்த படத்தில், ஆண்ட்ரியாவின் நடிப்பு கவனம் பெற்றது.
தற்போது இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் 'மனுசி' என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.