scorecardresearch

அஜித் ரீல் மகள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்: ரசிகர்கள் ஷாக்

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அவருடைய மகள் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனிகா சுரேந்தரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Actress Anikas Tearful Anjali Poster Goes Viral
நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் வைரலாகின.

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அவருடைய மகள் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனிகா சுரேந்தரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகை அனிகா சுரேந்தர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்ததால், இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர்.

அஜித்தின் படத்தில் நடித்த பிறகு, அனிகா சுரேந்தர் தமிழ் சினிமாவில் அழகான குட்டிப் வலம் வந்தார். தற்போது அனிகா வளர்ந்து பெரிய பெண்ணாக மாறி, பல முன்னணி நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு இருக்கிறார்.

அனிகா சுரேந்தர் புட்ட பொம்மா என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். கப்பேலா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கான இண்த படம் அனிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

புட்ட பொம்மா படத்தின் வெற்றியை அடுத்து, அனிகா சுரேந்தர் ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அனிகா நடித்த முத்தக் காட்சி சர்ச்சை ஆனதால், ஓ மை டார்லிங் ஒரு காதல் படம் என்பதால், முத்தக்காட்சி இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. கதை சொல்லும்போதே இயக்குநர் முத்தக்காட்சி குறித்து கூறியிருந்தார் என்று அனிகா விளக்கம் கொடுத்தார்.

நடிகை அனிகா சுரேந்தர் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கிறார். கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் பரவி வருகிறது. அந்த போஸ்டரில், அனிகாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், செல்வி நந்தினி 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்று போடப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, இந்த போஸ்டர் ஒரு படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்ற தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress anika surendar death poster trending in social media fans gets shocks

Best of Express