Advertisment

இளம் நடிகை அனிகாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: யாரு பார்த்த வேலை இது?

நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைரலானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Anikas Tearful Anjali Poster Goes Viral

நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் வைரலாகின.

நடிகை அனிகா குழந்தை நட்சத்திரமாக 2007-ல் மலையாள படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, 2014-ல் த்ரிஷாவின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமாகி அஜித் குமாரின் மகளாக வாழ்ந்து இருப்பார்.

இன்றளவும் உனக்கென வேணும் சொல்லு.. பாடல் மகள்களை பெற்ற பெற்றோருக்கு தேசிய கீதமாக உள்ளது.

Advertisment

இந்த நிலையில், விஸ்வாசம் படத்தில் அஜித் குமார்- நயன்தாராவின் மகளாக அனிகா நடித்திருந்தார். இந்தப் படம் குடும்பங்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தற்போது அனிகா இளம் நடிகையாக தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவியின் மிருதன் படத்தில் அவருக்கு தங்கையாகவும், மாமனிதன் படத்திலும் நடித்திருந்தார்.

அண்மையில் வெளியான படம் ஒன்றில் லிப் லாக் காட்சியால் அனிகா விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில், நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று வைரலானது.

இதைப் பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். இந்தப் பட போஸ்டரையும் பகிர்ந்து வந்தனர்.

சிலர் கண்ணீர் அஞ்சலி எமோஜிகளையும் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில், இந்தப் போஸ்டர் உண்மை இல்லை என்றும் படத்துக்காக அச்சடிக்கப்பட்டது என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இந்தத் தகவல் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment