விக்னேஷ் சிவனுடன் அஞ்சலி குவாரண்டைன் டப்பிங்; வைரல் வீடியோ

கொரோனா பொது முடக்க காலத்தில் நடிகை அஞ்சலி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் வீடியோ காலில் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசியுள்ளார். அஞ்சலி தான் டப்பிங் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

actress anjali vignesh sivan, actress anjali, vignesh sivan, anjali dubbing on video call, anjali dubbing viral video, viral video, விக்னேஷ் சிவனுடன் அஞ்சலி, அஞ்சலி டப்பிங் வீடியோ, குவாரண்டைன் டப்பிங்; வைரல் வீடியோ, விக்னேஷ் சிவன், quarantine dubbing, vignesh sivan nayanthara, tamil cinema news, latest tamil cinema news, viral video news, tamil video news

கொரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்தியாவசிய பணிகளைத் தவிர சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. 5-ம் கட்ட பொது முடக்க அறிவிப்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிபந்தனைகள் கட்டுப்பாடுகளுடன் டிவி சீரியல் படப்பிடிப்புகள், சினிமா போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அஞ்சலி, அனுஷ்கா ஷெட்டி, மாதவன் ஆகியோருடன் இணைந்து நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அஞ்சலி, தனக்கு ஒரு பெரிய பிரேக்கை தரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

தற்போது, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை அஞ்சலி, இயகுனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து வீடியோ காலில் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார்.

அஞ்சலி வீடியோ காலில் தான் டப்பிங் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து அஞ்சலி குறிப்பிடுகையில், “டப்பிங் பேசிய தருணம். வீடியோ காலில் குவாரண்டைன் டப்பிங்” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அஞ்சலி டப்பிங் பேசிய வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் என்ன படம் என்று கேட்டு வருகின்றனர். சிலர், நயன்தாரா எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress anjali vignesh sivan dubbing on video call viral video

Next Story
என்னப்பா இப்படி ஒரு லவ்வா? 90ஸ் கிட்ஸ்களை கட்டிப்போட்ட சூர்யா – ஜோ மூவிஸ்!surya jyothika movies
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com