/tamil-ie/media/media_files/uploads/2019/06/z976.jpg)
actress anupama parameswaran about bumrah - 'பும்ராவை காதலிக்கிறேனா?' - மனம் திறந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்
இந்திய கிரிக்கெட் அணியின், ஆர்ப்பாட்டமான அட்டாக்கிங் ஃபாஸ்ட் கியர் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா என்பது அனைவருக்கும் தெரியும். அவரது யார்க்கர்ஸ், பீமர்ஸ் பந்துகளை ரொட்டேட் செய்ய முடியாமல், டாப் பேட்ஸ்மேன்களும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பும்ராவும் ஒரு பிரபல நடிகையும் காதலிப்பதாக, கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் செய்திகள் றெக்கை கட்டி பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கேரளாவைச் சேர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரனும் - பும்ராவும் காதலிப்பதாக இணையவாசிகள் டிக்ளேரே செய்து மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ட்விட்டரில் பும்ரா ஃபாலோ செய்யும் ஒரே நடிகை அனுபமா மட்டும் தான். அதேபோல், அனுபமாவும் பும்ராவை ஃபாலோ செய்கிறார். பும்ராவின் பதிவுகளை ஷேர் செய்வதும், லைக் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். பும்ராவும், அனுபமா பதிவுகளுக்கு லைக் செய்கிறார்.
இந்நிலையில், பும்ரா குறித்து அனுபமா தற்போது மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "எனக்கும், பும்ராவுக்கும் காதல் என்று தகவல்கள் பரவி வருகின்றன. நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். வேறு எந்த தொடர்பும் இல்லை" என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.