தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான மெகாஹிட் படமான பிரேமம் படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து தெலுங்கு பிரேமம் படத்தில் நடித்த இவர், தொடர்ந்து ஒரு சில படங்களில் நாயகியாக நடித்தார். அதன்பிறகு தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார்.
அதர்வா ஜோடியாக தள்ளிப்போகாதே படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் தற்போது ஜெயம்ரவியின் சைரன் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் லைக்ஸை வாரி குவித்து வருகின்றனர். இதன் காரணமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியனுக்கு அதிகமாக ஃபாலோயர்களை வைத்துள்ள அனுபமா அவ்வப்போது சில வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரன் தனது கையில் பிளாஸ்டிக் கவரை மோதிரம் போல் வைத்துக்கொண்டு தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இது காமெடியாக வெளியிட்ட ஒரு பதிவு அவருக்கு இன்னும் நிச்சயதார்தம் ஆகவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் அடுத்த சில மாதங்களில் பும்ரா சஞ்சனாவை திருமணம் செய்து இந்த தகவல் வதந்தி என்பதை உறுதி செய்தார். தற்போது கையில் பிளாஸ்டிக் பேப்பருடன் நிச்சயம் ஆகிவிட்டதாக அனுபமாக கூறியிருப்பது உண்மையா அல்லது இதுவும் வதந்தியா என்று சந்தேகம் வரும் நிலையில், உங்களுக்கு இதே வேலையா போச்சு என்று பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“